×

சிறந்த உணவு பொருட்களுக்கு ஈரோடு எஸ்பிஎஸ் பிராண்ட்

ஈரோடு, டிச.25: ஈரோடு வில்லரசம்பட்டி அடுத்த தொட்டம்பட்டியில் 27 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உதயம் பிளவர் மில்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான எஸ்பிஎஸ் பிராண்டு அக்மார்க் கடலை மாவு, அக்மார்க் கோதுமை மாவு, அரிசி மாவு, ராகி மாவு, பஜ்ஜி மாவு, மைதா மாவு, ரவை, கோதி குருணை உள்பட பலவகையான அன்றாட உணவுப்பொருட்களில் மக்களின் இதயங்களை கவர்ந்த தயாரிப்புகளாக விளங்கி வருகிறது.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் பி.செல்வம் கூறியதாவது:கையில், எங்களது எஸ்பிஎஸ் பிராண்டு வகை தயாரிப்புகள் அனைத்தும்  ஐ.எஸ்.ஓ. 22000:2005 தரச்சான்றிதழ் மற்றும் அக்மார்க் தரச்சான்றிதழ் பெற்று தமிழகம் முழுவதும் உள்ள மக்களால் காலை, மாலை, இரவு நேர உணவுவாக விரும்பி உண்ணப்படுகிறது.உணவு தானியங்களை நாங்களே உற்பத்தியாகும் இடத்திற்கே நேரடியாகச் சென்று கொள்முதல் செய்து அதை சுகாதாரமான முறையில் தரமான மாவு வகைகளாக மாற்றி மக்களுக்கு வழங்கி வருகிறோம். எங்கள் தயாரிப்புகள் அனைத்தும்  ஃபுட் டெக்னாலஜி வல்லுனர்களைக் கொண்டு முற்றிலும் மேம்படுத்தப்பட்ட தரத்துடன் கடைகளில் கிடைக்கிறது.

மேலும், ஈரோடு கொங்கலம்மன் வீதியில் உதயம் ஸ்டோர்ஸ் மற்றும் ஈரோடு கந்தசாமி வீதியில் கீர்த்தனா ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடைகளை நடத்தி வருகிறோம். எங்களிடம் அனைத்து பள்ளி,கல்லூரி, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை உணவகங்கள், ஓட்டல்கள், திருமணம், திருவிழா மற்றும் அனைத்து விழாக்களுக்கான மளிகை பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்கிறோம். மேலும் விபரங்களுக்கு 93823 10011, 0424 2555953 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : SPS Brand ,
× RELATED ரூ.1.53 கோடிக்கு எள் ஏலம்